×

ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல் கோடையின் உச்சத்தால் அமோகமாக விற்பனையாகும் பழங்கள்

ஆர்.எஸ்.மங்கலம், ஏப். 24: ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தர்பூசணி மற்றும் இளநீர், கரும்பு ஜூஸ் ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி சோழந்தூர், ஆனந்தூர் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. காரணம் கடந்த 3 ஆண்டுகளாக மழை தண்ணீர் இல்லாத காரணத்தால் கண்மாய், குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் போய் விட்டது. இதனாலும் எங்கு பார்த்தாலும் ஒரே கருவேல மரங்கள் மண்டி இருப்பதாலும் வெப்பம் மிகுதியாகவே காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வெயில் அதிகமாகவே உள்ளது. அப்படியே வெளியில் வந்தால் ஏதாவது குளிர்பானங்களையும், குளிர்ந்த தண்ணீரையுமே குடிக்க தோன்றுகின்றது. இவற்றை விட தர்பூசணி, இளநீர், கரும்பு ஜூஸ் போன்றவை உடல் நலத்திற்கு நல்லது. இருந்தாலும் இளநீர் விலை தற்சமயம் அதிகமாக உள்ளது. இதனால் ஏழை,எளிய மக்கள் வாங்கி தங்களது தாகத்தை தீர்பதற்கு கரும்பு ஜூஸ், தர்பூசணி சிறந்ததாக உள்ளதால், சந்தை நாட்களில் தர்பூசணி, நுங்கு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது.

மின்கம்பத்தை மாற்றாமல் அலட்சியத்தில் ஊழியர்கள் ராமநாதபுரம், ஏப்.24: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முதல் நாள் பரவலாக பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் ராமநாதபுரத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில் ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோயில் அருகே மின்கம்பம் முறிந்து விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து அருகில் உள்ள மின்கம்பங்களும் சாய்ந்தது. அப்பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் தடைபட்டது. உடன் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சாய்ந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றினர். விழுந்த மின்கம்பத்தின் மின் வயர்கள் இழுத்ததில் சாய்ந்த மின்கம்பம் விழாதவாறு அருகில் உள்ள மரத்தில் கயிறு, கம்பிகள் மூலம் இழுத்து கட்டி வைத்தனர். மழை பெய்து ஒரு வாரமாகி விட்ட நிலையில் மின்கம்பத்தை அதிகாரிகள் சரி செய்யாமல் உள்ளனர். அருகில் பள்ளிகள் உள்ள நிலையில் மின்கம்பம் சாய்ந்து விடுமே என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை