18 ஆண்டுகளாக நிரம்பாத கப்பலூர் கண்மாய்

திருமங்கலம், ஏப். 24: திருமங்கலம் பகுதியில் உள்ள பெரியகண்மாயில் ஒன்றாக கப்பலூர் கண்மாய் உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவை கொண்டது. வைகை தண்ணீர், மறவன்குளம், சேர்வராயன்குளம் நிறைந்து வரும் உபரி நீர் இந்த கண்மாயிக்கு வந்து சேர்வது வழக்கம். கடந்த 2001ம் ஆண்டு திருமங்கலம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கப்பலூர் கண்மாய் நிரம்பியது. இதன்பின்பு இன்றுவரையில் கண்மாய் நிரம்பவில்லை. கடந்த 18 ஆண்டுகளில் பாதியளவிற்கு கூட தண்ணீர் இல்லாததால் இந்த கண்மாயை நம்பியுள்ள விவசாய வயல்நிலங்கள் அனைத்தும் தற்போது பூந்தோட்டமாக மாறியுள்ளது. கண்மாய் வறண்டதால் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் தங்களது வயல்களில் போர்வெல் அமைத்து மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட பூவகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இது தவிர காய்கனிகளையும் பயிரிட்டு லாபம் பெற்றுவருகின்றனர். இதுகுறித்து கப்பலூர் விவசாயிகள் கூறுகையில், ‘மழை பெய்து கண்மாயில் நீர் நிரம்பினால் நாங்கள் மீண்டும் நெல்நடவுக்கு தயாராக காத்திருக்கிறோம். இயற்கை மனம் வைத்தால் இது நடைபெறும்’ என்றனர்.

Related Stories: