குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

பேரையூர், ஏப். 24: பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணவாய்பட்டி முதல் சாப்டூர் வரையிலான சாலை குண்டும், குழியுமான சாலையில் விபத்து அபாயம் நிலவுகிறது.  இதனால் சாலையை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரையூர் தாலுகா சேடப்பட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட கணவாய்பட்டி முதல் சாப்டூர் வரை சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக பேரையூரிலிருந்து சாப்டூர், அணைக்கரைப்பட்டி, எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளன.

இந்த பள்ளங்களால் டூவீலர்களில் செல்பவர்கள் அதிகமாக விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த பள்ளங்களால் அதிகமான விபத்து ஏற்படுகிறது.  குறிப்பாக டூவீலர்களில் வருபவர்கள் எதிரே வரும் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் பள்ளத்தை கவனிக்காமல் விழுந்து பலபேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் இந்த பள்ளங்களை தவிர்க்க வேன், லாரிகள், கட் அடித்து ஓட்டுவதால், வாகன விதிமுறைகளை மீறாமல் முறையாக ஓட்டி வருபவர்களும் விபத்தில் சிக்கி விடுகின்றனர் என இந்த சாலையை விரைவாக சீர்செய்ய வேண்டும், அவசரமாக பள்ளங்களை தற்காலிக தீர்வாக ஒட்டுச்சாலையாவது போட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: