ஓடும் லாரியில் எண்ணெய் பாக்கெட் திருட்டு 2 பேர் பேர் கைது

மேலூர், ஏப். 24: ஓடும் லாரியில் இருந்து எண்ணெய் பாக்கெட்டுகளை திருடிய 2 பேரை ஹைவே பேட்ரல் வாகனத்தில் சென்ற போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மேலூர் நான்குவழிச் சாலை வழியாக நேற்று சென்றது. லாரியை திருநெல்வேலியை சேர்ந்த வரதராஜன் (29) ஓட்டி சென்றார். லாரி கச்சிராயன்பட்டி அருகில் சென்றபோது லாரியின் பின்புறமிருந்து 2 நபர்கள் கீழே இறங்கி ஓடினர். இதை லாரியின் பின்னால் வந்த ஹைவே பேட்ரல் வாகன போலீசார் கண்டனர். உடனடியாக அந்த நபர்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் ஒரு கும்பலாக காரில் வந்ததாகவும், லாரிகளின் பின்னால் ஏறி தார்பாயை கிழித்து பொருட்களை திருடுவது தங்கள் வேலை என்றும் கூறினர். இதைத்தொடர்ந்து தேனியைச் சேர்ந்த மகாராஜா (23), மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த ரவி (30) ஆகியோரை கைது செய்து கொட்டாம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடமிருந்து 10 பாக்கெட்கள் கொண்ட 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலரை கொட்டாம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: