சித்திரை திருவிழா நாளில் 14 பவுன் நகை பறிபோனது

மதுரை, ஏப். 24: மதுரையில் சித்திரைத்திருவிழா நாட்களில் நடந்த நகைபறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் 14 பவுன் நகைகள் திருடு போயுள்ளது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.  மதுரை மாகாளிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியம்மாள்(64). வைகை ஆற்றில் அழகர் இறங்குவதை காணவந்தார். அப்போது கூட்ட நெரிசலில் இவர் அணிந்திருந்த 4 பவுன் செயின் பறிக்கப்பட்டது. வில்லாபுரத்தை சேர்ந்தவர் அன்னலட்சுமி(37). இவர் திருவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய ேபாது 9 பவுன் செயினை பறிகொடுத்தார். மதிச்சியம் போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த சாமி மகள் ஸ்டெபிகிராப்(26). இவர் மொபட்டில் சென்றார். கேகேநகர் வாக்கர்ஸ் பார்க் ரோட்டில் சென்றபோது, ஸ்டெபிகிராபியின் கைப்பையை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

அதில் ரூ.10 ஆயிரம், செல்போன்கள் இருந்தன.  இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் காமராஜர் காலனியை சேர்ந்த சேகர் மகள் முத்துமீனா (23). இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். இரவு தூங்கி விட்டு மறுநாள் எழுந்து பார்த்தபோது, அவர் கழற்றி வைத்திருந்த ஒன்றரை பவுன் செயினை காணவில்லை. புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுரையில் சித்திரை திருவிழா நடந்த நாட்களில் மொத்தம் ரூ.14 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: