×

ஒட்டன்சத்திரத்தில் தெருநாய் தொல்லை தாங்க முடியல

ஒட்டன்சத்திரம், ஏப். 24: ஒட்டன்சத்திரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம்  நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து  வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை  அதிகரித்துள்ளது. கழிவுநீரில் நாய்கள் உருண்டு, பிரண்டு வீடுகளுக்குள்  புகுந்து விடுகின்றன. மேலும் வெறி பிடித்து நாய்கள் சாலையில் டூவீலரில்  செல்வோவோரையும், பாதசாரிகளையும் விரட்டி கடிக்கின்றன. இதனால் மாணவர்கள்,  முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும்  பாதிக்கப்பட்டுள்ளனர். வெறிநாய் கடியால் ரேபிஸ் தாக்கி உயிரிழக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் நகராட்சி அதிகாரிகள்  கண்டும், காணாமல் உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : street ,
× RELATED ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று...