×

வத்தலக்குண்டு அருகே மின்கோபுரத்தில் தொங்கும் தார்பாயால் ஆபத்து

வத்தலக்குண்டு, ஏப். 24: வத்தலக்குண்டு  அருகே வெங்கிடாஸ்திரிகோட்டை கண்மாயையொட்டி உயர்நிலை மின்கோபுரம் ஒனறு  உள்ளது. இப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமார் 2 மணிநேரம் பலத்த  காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஒரு தோட்டத்திலிருந்த தார்பாய்  காற்றுக்கு பறந்து சென்று மின்கோபுரத்தில் மின்வயர் செல்லும் பகுதியில்  சிக்கி கொண்டது. தொடர்ந்து காற்று அடித்து வருவதால் அந்த தார்பாய் ஆடி  கொண்டே இருக்கிறது. இதனால் மின்தடை ஏற்படுவதுடன் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே மின்வாரியத்தினர் தாமதமின்றி தார்பாயை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து  மேலகோவில்பட்டி தங்கப்பாண்டி கூறுகையில், ‘உயர்நிலை மின்கோபுரம்  வத்தலக்குண்டு- நிலக்கோட்டை சாலையில் உள்ளது. இதனால் மின்கோபுரத்தில்  தார்பாய் சிக்கியிருப்பது மின்வாரியத்தினருக்கு தெரியாமல் இருக்க  வாய்ப்பில்லை. மெத்தனத்தை கைவிட்டு தார்பாயை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என்றார்.

Tags : Dharbayal ,Minakkopur ,Vadalakuddu ,
× RELATED வத்தலக்குண்டு அருகே அரசுப் பள்ளிக்கு...