×

சின்னாளபட்டி சித்திரை திருவிழா கோலாகலம் ராமஅழகர் தசாவதாரத்தில் அருள்பாலிப்பு

செம்பட்டி, ஏப். 24: சின்னாளபட்டி சித்திரை திருவிழாவையொட்டி ராமஅழகர் தசாவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சின்னாளபட்டியில்  சித்திரை திருவிழா கடந்த 3 நாட்களுக்கு முன்பு சித்ரா பவுர்ணமியன்று  துவங்கியது. தினசரி ஸ்ரீராம அழகர் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். நேற்று ராமஅழகர்  தசாவதாரம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.  மச்ச அவாதாரம், கூர்ம அவதாரம், வராஹி அவதாரம் எடுத்து ராமஅழகர்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பெருமாள் அலங்காரத்தில்  அருள்பாலித்தார். தொடர்ந்து தசாவதார கொட்டகை அருகே தனிமேடையில்  ஆண்டாள் அழகருடன், ஆஞ்சநேயர், கருடாழ்வார் இருப்பது போல் அலங்காரம் செய்து பக்தர்கள் பார்வைக்காக வைத்திருந்தனர். சுவாமி அலங்காரத்தை கனகசபாபதி  குருக்கள் தலைமையில் ராஜாராம், மோகன் ஆகியோர் செய்திருந்தனர். விழா  ஏற்பாடுகளை ராமஅழகர் தேவஸ்தான கமிட்டியார்கள் செய்திருந்தனர்.  பக்தர்களுக்கு ஆறுவகை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags : Chinnalapatti Chaitali ,festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!