×

நிலக்கோட்டையில் மீண்டும் வேலை கோரி ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு, ஏப். 24: நிலக்கோட்டையில் ஊறுகாய் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீண்டும் வேலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலக்கோட்டை-அணைப்பட்டி சாலையில் தனியார் ஊறுகாய் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் என சுமார் 600 பேர் வேலை செய்கின்றனர். இதில் 4 பேரை நிர்வாகம் அவர்களின் பெங்களூர் தொழிற்சாலைக்கு மாற்றியது. இதை கண்டித்து சுமார் 100 தொழிலாளர்கள் குரல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களும் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்தும், நீக்கம் செய்யப்பட்வர்களை மீண்டும் வேலைக்கு சேர்க்க கூறியும் நிலக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐஏபி தொழிலாளர் முன்னணி தலைவர் தேவகுமார் தலைமை வகிக்க, செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார், நிர்வாகி தமிழ்வேந்தன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஒரிசா, ஆந்திரா தொழிலாளர்களை கொண்டு வந்து உள்ளூர் தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை மாற்ற வேண்டும், நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலையில் சேர்க்க கோரியும் கோஷமிட்டனர். நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்