×

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக அரசு பஸ்கள் செல்ல நடவடிக்கை

வானூர், ஏப். 24:  வானூர் தாலுகா மொரட்டாண்டி புறவழிச்சாலையில் அரசு பேருந்துகளை இயக்குவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னை, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம், சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு வழியாக புதுச்சேரி செல்லாமல் மொரட்டாண்டி-இரும்பை புறவழிச்சாலை வழியாக செல்கின்றன.

இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு இறக்கப்படுவதால் சுமார் 2 கி.மீ தூரம் பெண்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடன் நடந்து வர வேண்டியுள்ளது. இந்த பகுதிகளில் வழிப்பறி, நகை திருட்டு ஆகியவை அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது.எனவே, புறவழிச்சாலையாக செல்லாமல் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Trichythurampalam Cochin ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...