×

பெரம்பலூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் மின்விளக்கு அமைக்கும் பணி தீவிரம்

பெரம்பலூர்,ஏப்.24: பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான வாக்குகள் எண் ணும் மையங்களில் முகவர்களுக்கான சவுக்குமரங்களால் ஆன 12அடிஉயரத் தடுப்பு கள், இரவைப் பகலாக்கும் மின்விளக்கு வசதிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்திய தேர்தல்ஆணையத்தால் 2ம்கட்டமாக நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர் தல் தமிழகம், புதுவையில் உள்ள 40தொகுதிகளுக்குக் கடந்த18ம்தேதி நடத்தப்பட் டது. இதில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட குளித்தலை, முசிறி, மண் ணச்சநல்லூர், லால்குடி,  துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி) ஆகிய 6சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 1644 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்புடன் பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்திற் குக் கொண்டு வரப்பட்டது.

அங்குள்ள தனலெட்சுமி சீனிவாசன் நர்சிங்கல்லூரியின் தரைதளத்தில் பெரம்ப லூர் சட்டமன்றத்தொகுதி மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களும், முதல் தளத்தில் குளித்தலை சட்டமன்றதொகுதி மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களும், 2ம்தளத்தில் முசிறிசட்டமன்றதொகுதி மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பான அறைகளில் வைத்துப்பூட்டி சீல்வைக்கப்பட்டது.இதேபோல் தனலெட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியின் தரைதளத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், முதல்தளத்தில் துறையூர் சட்டமன்றத்தொ குதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2ம்தளத்தில் லால்குடி சட்டமன்றத் தொகுதி மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களும், பாதுகாப்பான அறைகளில் வைத் துப்பூட்டி சீல்வைக்கப்பட்டது.

மேமாதம் 23ம்தேதியன்று இங்கு வாக்குஎண்ணிக்கை நடக்கிறது. இதனையொ ட்டி அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு எண்ணப்படவுள்ளது. முன்னதாக தபால் வாக்குகள் எண் ணப்படும். இதனையொட்டி 2கல்லூரிகளில் அமைக்கப்பட்ட வாக்குஎண்ணும் மையங்க ளில் முகவர்கள் நிற்பதற்காக சவுக்கு கழிகளால் ஆன பேரிகாடுகள் தடுப்புசுவர்கள் போல் கட்டிடத்தின் உட்புறம் முழுவதும் 12அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவைப் பகலாக்கும் விதத்தில் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை விபரங்களைத் தெரிவிக்கும் பெயர்ப்பலகை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்துப் பிரித்து பதிவான வாக்குகளை முகவர்களிடம் காட்டு வதற்கான மேசைகள் சுற்றுகளுக்கேற்பவும் வைக்கப்பட்டு வருகிறது.இந்தப்பணிகள் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தா, மாவட்ட வருவாய்அலுவலர் அழகிரிசாமி ஆகியோரது ஏற்பாட்டில் நடந்துவருகிறது.


Tags : Voting Centers ,Perambalur Lok Sabha ,
× RELATED குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே...