×

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி 13 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கல்லூரியாக தரம் உயர்வு

பெரம்பலூர்,ஏப்.24: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவந்த பாரதிதாசன் பல்க லைக்கழக உறுப்புக்கல்லூரி 13ஆண்டுகளுக்குப்பிறகு அரசுக்கல்லூரியாக தரம்உயர்ந்தது.தமிழகஅளவில் நேரடி அரசுக்கல்லூரிகளாக மொத்தம் 60கல்லூரிகளும், அரசு உதவிபெறும் கல்லூரிகளாக 36கல்லூரிகளும்  உள்ளன. பல்வேறு பல்கலைக்கழ கங்களின் கட்டுப்பாட்டில் உறுப்புக் கல்லூரிகளாக 41கல்லூரிகள் உள்ளன. இதில் பல்கலைக்கழகங்கள் ஆளுக்கொரு செமஸ்டர் கட்டணங்களை நிர்ணயித்து வசூலிப்பது, நிதிவசதியின்றி கட்டமைப்புவசதிகளை மேம்படுத்தாததுபோன்ற குற்றச்சாட்டுகள் தமிழகஅரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2018 ஜூன்மாதம் தமிழகஅரசு 110விதியின்கீழ் வெளியிட்டஅறிவிப்பில்,தமிழகத்திலுள்ள பல் கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள 41உறுப்புக்கல்லூரிகளை 3கட்டமாக அரசுக் கல்லூரிகளாக தரம்உயர்த்தி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

 இதன்படி முதல்கட்டமாக 41கல்லூரிகளில் 14உறுப்புக் கல்லூரிகளை நடப்பா ண்டு அரசுக் கல்லூரியாகத் தரம்உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டது. இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் பெரம்பலூர், ஒரத்தநாடு, லால்குடி, அறந்தாங்கி ஆகிய இடங்களிலுள்ள 4உறுப்புக்கல்லூரிகள் அரசுக் கல்லூரிக ளாக 2018ஜூன் 1ம்தேதியே அறிவிக்கப்பட்டது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூரில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நடப்பா ண்டு அரசுக்கல்லூரியாகத் தரம்உயர்த்தப்பட்டுள்ளது. பெரம்பலூரில் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலினால் நவம்பர் மாதம் 15ம்தேதிமுதல் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி பழைய ஆர்டிஓ அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 பெரம்பலூர் துறையூர் சாலையில் குரும்பலூருக்கு மேற்கே 300மீட்டர் தொலை விலுள்ள இந்தக்கல்லூரியில் 13ஆண்டுகளில் படிப்படியாக பட்டவகுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 14இளங்கலை, 6முதுகலை, 8பிஎச்டி மற்றும் பல்க லைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் ஆகியவற்றோடு செயல்பட்டுவருகிறது. இதில் உறுப்புக் கல்லூரி அரசுக் கல்லூரியாகத் தரம்உயர்ந்தாலும், முதுநிலை விரிவாக்க மையம் மட்டும் பல்கலைக்கழக கட்டுப்பாட்டிலேயே இயங்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மட்டும் 5எம்எஸ்சி பட்டவகுப்புகள் உள்ளன. உறுப்புக் கல்லூரியில் 13 நிரந்தரப் பணியாளர்கள், 64 தற்காலிகப் பணியாளர்கள், 22அலுவலகப்பணியாளர்கள் என 99பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் நிரந்தரப் பணியாளர்களை மட்டும் பல்கலைக்கழம் எடுத்துக்கொள்ளும். இந்தக் காலிப்பணியிடங்களை அரசு நிரப்பும் வரை தற்காலிகப் பணியாளர்கள் அவற்றை ஈடு கட்டுவார்கள்.உறுப்புக் கல்லூரிகளிலேயே 28பட்ட வகுப்புகளைக் கொண்டு மிகப்பெரிய அள வில் வளர்ந்துள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி அரசுக் கல்லூரியாகத் தரம் உயர்ந்துள்ள நிலையில், கூடுதல் கட்டிடவசதி, தரமான விளையாட்டு மைதானம், பாதுகாப்பான சுற்றுச்சுவர்வசதி, நிரந்தர பஸ்நிறுத்தம் வசதி, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடவசதிகளை இன்றளவும் எய்தாமல்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசுக்கல்லூரி அதிவிரைவில் ஏற்படுத்தித் தருமென பேராசிரியர்களும், பெற்றோர்களும், மாணவ,மாணவியரும் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Bharathidasan University ,
× RELATED பி.எச்.டி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு...