×

குளித்தலை ஒன்றிய பகுதியில் குழாய் பழுதால் வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்கப்படுமா?

குளித்தலை, ஏப்.24:  கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தேவைக்காக 13 ஊராட்சிகளிலும் ஆங்காங்கே காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் ஒரு சில நேரங்களில் சமூக விரோதிகளால் கிராம பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர் .மேலும் இந்நிலை குறித்து ஊராட்சி மன்ற பணியாளரிடம் குடிநீர் குழாய் சரிசெய்து கொடுக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்வதில்லை. இதனால் கிராம பகுதியில் காவிரி குடிநீர் வீணாக செல்கிறது . தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து ஊராட்சிகளிலும் பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் குழாய்களை பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் குடிநீர் குழாய்களை நாசப்படுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : bathroom ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் ஸ்டேஷனில்...