கும்பகோணத்தில் உலா வரும் வெளிமாநில பெண் திருடர்கள் ஒருவரை பிடித்து விசாரணை

கும்பகோணம், ஏப். 24: கும்பகோணம் பகுதியில் வெளிமாநில பெண் திருடர்கள் அதிகளவில் உலா வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரகார கோயில்கள், புராதன கோயில்கள், நவக்கிரக கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு விழா காலம் மட்டுமில்லாமல் தினம்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு செல்வதற்காக சொந்த வாகனத்தில் வருபவர்கள் கும்பகோணத்தில் அறை எடுத்து தங்குவர். பேருந்துகளில் வருபவர்கள் கும்பகோணம் பஸ் நிலையத்துக்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய கோயில்களுக்கு செல்வர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கும்பகோணம் பேருந்து நிறுத்தத்தில் பர்ஸ், நகைகள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார் வந்தனர்.

இதைதொடர்ந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தில் ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்கள், தங்களுடன் பெண் குழந்தைகளை அழைத்து பேருந்தில் ஏறுவதுபோல் அருகில் வந்து பொருட்களை எடுத்து செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மதியம் சந்தேகத்துக்கு இடமான வகையில் குழந்தையுடன் வந்த ஆந்திரா மாநிலத்தை பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது உடைந்த பிளேடுகள் அதிகளவில் இருந்தது. இதைடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்கும், உறவினர்கள் ஊரான கும்பகோணத்துக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களிடம் நகை, பொருட்களை பயன்படுத்தி திருடர்கள் திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே பேருந்து நிலையம் மற்றும் கும்பகோணம் பகுதி தெருக்களில் தீவிரமாக கண்காணித்து வெளிமாநில திருடர்களை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: