தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நாளன்று 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு விடுப்புடன் கூடிய சம்பளம் அறிவிப்பு விவசாய தொழிலாளர் சங்கம் வரவேற்பு

தஞ்சை, ஏப். 24: இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பக்கிரிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவை தேர்தல் தினத்தன்று பல இடங்களில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி அவர்கள் வாக்குரிமையை பறித்த அவலம் நடந்துள்ளது.அதே நேரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் பாஸ்கர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் கடந்த 18ம் தேதி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென அறிவித்துள்ளார். இதை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வரவேற்கிறது.

அதே நேரத்தில் பல இடங்களில் பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படாத அவலமும் நடந்துள்ளது எனவே அந்த இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் சம்பளம் ரூ.224 லிருந்து ரூ.229 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கும் நேரத்தில் தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கேற்ப அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வு என்பது போதாது. எனவே கூலியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இதுவே அரசு மக்களுக்கு செய்யும் உதவியாக அமையும். 5 ரூபாய் சம்பள உயர்வு என்பது ஏற்று கொள்ள இயலாது. எனவே கூலியை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் அறிவிப்பை அமல்படுத்த கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: