குடந்தையில் மருத்துவர் நலச்சங்க பொதுக்கூட்டம்

கும்பகோணம், ஏப். 24: கும்பகோணத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ராஜன் பேசுகையில், திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளி மகளை அதே பகுதியை சேர்ந்து 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். திண்டுக்கல் காவல்துறையினர், பாலியல் பலாத்காரம் என பதிவு செய்யாமல் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக பொய்யான தகவல்களை கூறியுள்ளனர்.

3 குற்றவாளிகள் மீது பாலியல் வன்கொடுமை கொலை வழக்குப்பதிந்து கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மே 3ம் தேதி மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். 3 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்  என்றார்.

கூட்டத்தி பெரிய கோவிலில் மொட்டை அடிக்கும் பணியில் இருக்கும் தொழிலாளிகளையும், கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பவர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். முடிதிருத்துவோர் தொழிலாளிக்கு சலூன் கடைக்கு இலவச மின்சாரமும், இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும். 5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் நடேசன், மாநில பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: