×

டெல்டா மாவட்டங்களில் நடத்துனர் இல்லா பேருந்துகளில் குளறுபடி நஷ்டத்தை லாபமாக்க பொய்யாக கணக்கு காட்டும் போக்குவரத்து துறை

தஞ்சை, ஏப்.24:  டெல்டா மாவட்டங்களில் நடத்துனர் இல்லா பேருந்துகளில் வசூல்  குறைந்துவிட்டதால் மற்ற பேருந்துகளில் இருந்து வசூலை எடுத்து நடத்துனர்  இல்லா பேருந்துகள் லாபகராக இயங்குவதாக கணக்கு காண்பிப்பதாக குற்றச்சாட்டு  எழுந்து ள்ளது.
தமிழக போக்குவரத்து துறை சார்பில் கடந்த சில  மாதங்களுக்கு அனைத்து மண்டல ங்களில் இருந்து நடத்துனர் இல்லா பேருந்துகள்  இயக்குவது என்று புதிய அறிவி ப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி  நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து துறை  அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்ததையடுத்து அண்ணா தொழிற் சங்க நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் இந்த  திட்டத்தை செயல்படுத்தினர்.
இதேபோல் டெல்டா மாவட்டங்களில் கடும்  எதிர்ப்புகும் மீறி அண்ணா தொழிற் சங்க நிர்வாகிகள் ஒத்துழைப்புடன்  நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகிறது. டெல்டா  மாவட்டங்களில் போக்குவரத்து மண்டலத்தில் பேருந்து கள் நடத்துனர் இல்லாமல்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் நடத்துனருடன்  இயங்கிய போது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை தினசரி வசூல் செய்தது.  ஆனால் நடத்துனர் இல்லாமல் பேருந்து கள் இயக்க தொடங்கிய நாட்களில் இருந்து  சுமார் ரூ.10ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே தினசரி வசூலாகிறது.

இதற்கு  முக்கிய காரணம் நடத்துனர்கள் இருந்தால் பேருந்து நிலையத்தில் மட்டு  மல்லாமல் நகர் பகுதியில் சில இடங்களில் பயணிகள் ஏறுவார்கள். தற்போது  நடத்துனர் இல்லாமல் இருப்பதால் பேருந்து நிலையத்தில் ஏறும் பயணிகளை  ஏற்றிக் கொண்டு அங்கேயே பயனசீட்டு வழங்கிவிட்டு நடத்துனர் இறங்கி  விடுகிறார். இதன் பிறகு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றுவதில்லை. இதனால்  வசூல் முற்றி லும் குறைந்துவிட்டது. இந்நிலையில் நடத்துனர் இல்லா  பேருந்துகள் வசூலில் குறைந்துவிட்டு என்று போக்குவரத்து தெரிவிப்பதற்கு  பதில் இந்த திட்டம் லாபகரமாக செயல்படுத்த பட்டு வருவதாக கணக்கு காண்பிக்க  அதிக வசூல் கிடைக்கும் பேருந்துகளின் பணங்களை எடுத்து வசூல் குறைந்த  நடத்துனர் இல்லா பேருந்துகள் லாபகரமாக இருப்பதாக பொய்யான கணக்கு காட்டி  வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து போக்குவரத்து  ஊழியர்கள் கூறியதாவது: விமானத்தில் கூட பயணி களுக்கு திடீரென பிரச்னை  ஏற்பட்டால் விமான பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் தற்போது பேருந்துகளில்  நடத்துனர் இல்லா பேருந்து அறிமுகப்படுத்தி யுள்ளனர்.நடத்துனர் வெறும்  பயணசீட்டு மட்டும் வழங்ககூடியவர் அல்ல. பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும்  பிரச்னைகள், அசவுகரியங்களை நிவர்த்தி செய்ய கூடியவர். குறிப்பாக ஒரு பெண்  பயணிக்கு தொல்லை கொடுத்தால் அது குறித்து அந்த பயணிகள் கேட்டு பிரச்னையின்  தன்மை அறிந்து போலீசில் நடவடிக்கைக்கு உட்படுத்துவார்.

இந்த பிரச்னையை  ஓட்டுனர் கண்டுகொள்ள முடியாது. இதனை கண்டுகொண்டால் பேருந்தை இயக்க  முடியாது. இதனால் நடத்துனர் இல்லாத பேருந்து முதலில் பயணி களுக்கு  பாதுகாப்பற்ற பயணத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது நடத்துனர் இல்லாத  பேருந்துகள் அனைத்தும் இதற்கு முன்பு அதிக லாபகரமாக இயங்கிய பேருந்துகள்.  தற்போது நடத்துனர் இல்லாமல் இயக்க ஆரம்பித்ததில் இருந்து பெருத்த நஷ்டம்  ஏற்பட்டு வருகிறது. இதனை மூடி மறைக்க அலுவலர்கள் ஒரு மண்டலத்தில் அதிகமாக  வசூலாகும் பேருந்துகளின் பணத்தை எடுத்து நடத்துனர் இல்லாத பேருந்துகளில்  நடைபெற்ற வசூலாக காட்டி அரசின் புதிய திட்டம் லாபகரமாக செயல்படுகிறது என்று  அறிவிக்க இந்த மாதிரியான பொய்யான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது  முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து இயக்குவதை கைவிட  வேண்டும். பழையமுறைப்படி நடத்துனருடன் பேருந்துகளை இயக்க வேண்டும்  என்றனர்.

Tags : Delta Districts ,Department of Traffic ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!