×

மயிலாடுதுறை தேர்தல் தாசில்தாரை மாற்ற திமுக வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஏப்.24:மயிலாடுதறை மக்களவை தொகுதி தேர்தல் தாசில்தாரை மாற்ற திமுக வழக்கறிஞர் அணி, தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து திமுக வழக்கறிஞர் அணி தலைவர் டாக்டர் ராமசேயோன் தேர்தல் ஆணையத்திற்கு விடுத்துள்ள வேண்டுகோளில், மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து தேர்தல் தாசில்தாராக இருக்கும் ராஜகோபால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டிய  ஒத்துழைப்பை வழங்குவதில்லை. குறிப்பாக வாக்காளர் பட்டியல் முதல் தேர்தல் முடிந்து வாக்கு சாவடி வீதம் போடப்பட்ட வாக்குகள் குறித்த 17ஏ படிவம் போன்றவற்றை வழங்காமல் ஒட்டுமொத்தத்தில் குளறுபடி செய்கிறார். இவர் அனைத்திலும் காலதாமதம் செய்வதால் தேர்தல் பணி சுணக்கமாகவே நடைபெறுகிறது. அரசியல் கட்சியினருக்கு வழங்கவேண்டிய ஆவணங்களை கொடுக்க மறுப்பதுடன் பலமுறை தொடர்பு கொண்டாலும் பதில் கூறுவதில்லை. மேலும் தபால் வாக்குகள் குறித்து சந்தேகம் கேட்டால் அதற்கும் முறையாக பதில் அளிப்பதில்லை. தேர்தல் நடத்தும் கேயேடு, பூத்ஏஜென்ட் விண்ணப்பம், வாக்கு எண்ணிக்கை மைய ஏஜென்டுகளுக்கான விண்ணப்பம் எந்த விபரங்களைக் கேட்டாலும் பதில் சொல்லாமல் மேலதிகாரிகளை கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இவருக்காக ஒதுக்கப்பட்ட பணியை பார்க்க மறுக்கிறார். இவர் வாக்கு எண்ணிக்கைவரை பணியில் இருந்தால் காலதாமதமும், வீண் குழப்பங்களும் நேர விரயமும் ஏற்படும் என்பதால் உடனே விசாரணை மேற்கொண்டு அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமாருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : DMK ,election ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...