×

கீழ்வேளூர் அடுத்த தேவூர் அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

கீழ்வேளூர், ஏப்.24: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் செல்லமுத்துமாரியம்மன் கேயில் சித்திரை பெருவிழா  கடந்த 14ம் தேதி  பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினம்தோறும் அம்மன் வீதியுலா கட்சி நடைபெற்று வருகிறது.
முக்கிய விழாவாக நேற்று முந்தினம் இரவு காவடி அபிஷேகம் நடைபெற்றது. நேற்று முந்தினம் இரவு 22ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது. தேவூர், இலூப்பூர், ராதாமங்கலம், வெண்மணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீ மிதிப்பதற்காக சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தேவூர் பிடாரியம்மன் கோயிலில் இருந்து காத்தவராயன் சுவாமியுடன் செல்லமுத்து மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு கோயில் முன் அமைப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி  தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். நேற்று செடில் உற்சவம் நடைபெற்றது. 26ம் தேதி மஞ்சள் நீராடல், முளைப்பாரியும்,  ஊஞ்சல் உற்சவமும்  நடைபெறுகிறது. வரும் மே 7ம் தேதி பெரியநாயகியம்மன் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், விழாக்குழுவினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.



Tags : festival ,Devarur Amman Temple ,Kilaveloor ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...