×

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு இந்திய பெருங்கடலில் நாளை முதல் 2 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில், ஏப்.24: குமரி மாவட்ட மீனவர்கள் நாளை(25ம் தேதி)யும், நாளை மறுநாளும்(26ம் தேதி) மத்திய இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ், பங்குதந்தையர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:   மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடலில் இருந்து இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் ஏப்ரல் 25ம் தேதி அன்று ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் நிலை உள்ளது. எனவே ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் இந்த பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் காணப்படுகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை பகுதியில் 20 மி.மீ மழை பெய்திருந்தது. பெருஞ்சாணி 9.2, சிற்றார்-1ல் 15.2, சிற்றார்-2ல் 6, களியல் 6.2, குழித்துறை 5.4, புத்தன் அணை 10.4, கோழிப்போர்விளை 10, அடையாமடை 4 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 2.10 அடியாக உயர்ந்திருந்தது. பெருஞ்சாணியில் 20.65, சிற்றார்-1ல் 5.38, சிற்றார்-2ல் 5.48, பொய்கையில் 10.10, மாம்பழத்துறையாறு அணையில் 43.64 அடியாக நீர்மட்டம் இருந்தது.


Tags : fishermen ,Kumari ,Indian Ocean ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...