×

நாட்றம்பள்ளி அருகே புதையல் இருப்பதாக கூறி

நாட்றம்பள்ளி, ஏப்.24: நாட்றம்பள்ளி அருகே புதையல் இருப்பதாக கூறி, மர்ம நபர்கள் வெடிவைத்து தகர்த்த மலைப்பகுதியில் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியார் டேம் அருகே உள்ள மலைமீது அமைந்துள்ள குகை மண்டபத்தில், புதையல் இருப்பதாக கூறி, மர்ம நபர்கள் சிலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெரிய பள்ளம் தோண்டி வெடி வைத்து தகர்த்தனர்.இதுகுறித்து, தகவலறிந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், திருப்பத்தூர் வனவர் பரந்தாமன் மற்றும் வனத்துறையினர், வெலக்கல்நத்தம் விஏஓ சரவணன் ஆகியோர் பொதுமக்களின் உதவியுடன், நேற்று மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், `புதையல் இருப்பதாக நம்பி மர்ம நபர்கள் சிலர் இங்குள்ள குகை மண்டபத்தில் குழி தோண்டி வெடி வைத்தது தெரியவந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Tags : Natrampalli ,
× RELATED தகாத உறவை கைவிட மறுத்த கணவரின்...