×

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 4 மாதத்தில் 28 பேர் போக்சோவில் கைது

திருவள்ளூர், ஏப். 24:  கடந்த 4 மாதத்தில் மட்டும், சிறுமியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 28 பேரை போலீசார், ‘’போக்சோ’’’’வில் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் 18 வயதுக்கு குறைவான சிறுமியர் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், பாதிப்பு ஏற்படுத்தியவரை ‘’போக்சோ’’’’ சட்டத்தில் போலீசார் கைது செய்கின்றனர். இம்மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வெளியேறும் சிறுமியர், பாலியல் தொல்லைக்கு ளாக்கப்படுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் ஜனவரி 1 முதல் நேற்று (23ம் தேதி) வரை 28 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும், ஏப்ரல் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்திருப்பது, போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிஎஸ்பி., ஒருவர் கூறுகையில், ‘’போக்சோ’’’’ சட்டத்தில், அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பெண் இன்ஸ்பெக்டர்களால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆண் இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த பெண் காவலர், எஸ்.ஐ., ஆகியோரில் ஒருவர் கட்டாயம் உடன் இருக்க வேண்டும் என்பது விதி. இதனால் வழக்குப்பதிவு செய்வதை ஆண் இன்ஸ்பெக்டர்கள் தவிர்ப்பதோடு, பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு புகாரை மாற்றி விடுகின்றனர்.இச்சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு, குறைந்த பட்சம் ஆறு மாதம் ஜாமீன் கிடைக்காத வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் ஆண் இன்ஸ்பெக்டர்கள், போக்சோவில் கைது நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதை செய்தால் மட்டுமே, சிறுமியரை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுப்பவர்களை முழுமையாக ஒடுக்க முடியும்’’’’ என்றார்.


Tags : sexual harassment ,
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்