×

பாலிடெக்னிக் கல்லூரியில் 110 மாணவர்களுக்கு பணி ஆணை

திருக்கழுக்குன்றம், ஏப். 24: திரிபுரசுந்தரி அம்மன் பாதிருக்கழுக்குன்றம் அடுத்த ஈகை கிராமத்தில் உள்ள, திரிபுரசுந்தரி அம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் சார்பில், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு நேர்க்காணல் நடந்தது. அதில், 110 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதைதொடர்ந்து, தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் மாதவன், பொருளாளர் கௌதம் சந்த், இணை செயலாளர் ஆடலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கல்லூரி அறங்காவலர் ஆனூர் ஜெகதீசன் கலந்து கொண்டு, 110 மாணவர்களுக்கு மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மின்னணு துறை தலைவர் சசிகலா நன்றி கூறினார்.

Tags : Polytechnic College ,
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...