×

புதூர் ஊராட்சியில் அரசு சார்பில் வழங்கி இறந்துபோன இலவச கால்நடைகளுக்கு விரைவில் இன்சூரன்ஸ் வழங்கப்படும்

மதுராந்தகம், ஏப். 24: மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச கால்நடைகள் இறந்தன. அதற்கான இன்சூரன்ஸ் பணம் விரைவில் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மதுராந்தகம் அடுத்த பூதூர் ஊராட்சியில் 2000க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு முழுக்க முழுக்க விவசாய தொழிலே பிரதானமாக உள்ளது. இந்த கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ்  கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டில் சுமார் 30 குடும்பத்தினருக்கு தலா 4 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டன.

ஆனால், ஒரு சில மாதங்களிலேயே ஆடுகள், பல்வேறு காரணங்களால் பலரது வீடுகளில் இறந்தன. இதையடுத்து, பூதூர் கிராமத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர், தங்களின் ஆடுகள் இறந்ததற்கான இன்சூரன்ஸ் தொகையை பெற்றுத் தரக்கோரி கால்நடை துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதுதொடர்பாக, கால்நடை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சில நடைமுறை சிக்கல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறிக்கை தயாரித்தல் போன்றவற்றில் ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக இன்சுரன்ஸ் தொகை வழக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அவை சரிசெய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் அவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும் என்றனர்.


Tags : government ,Puthur ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...