திருக்கழுகுன்றத்தில் உலக புத்தக தினவிழா

திருக்கழுகுன்றம், ஏப். 24: திருக்கழுக்குன்றத்தில் உலக புத்தக தினத்தை ஓட்டி, ‘ரெயின்போஸ் அறக்கட்டளை’ சார்பில் உலக புத்தக தினவிழா அதன் அலுவலகத்தில்  நடந்தது.அறக்கட்டளை அறங்காவலர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகி ரஜினி முன்னிலை வகித்தார். இதில், ‘புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்தும், புத்தகங்களின் பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.   மேலும், யாருக்காவது பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நல்ல புத்தகங்களை பரிசாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.விழாவில், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் சிறந்த புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.


× RELATED 2வது நாளாக பரபரப்பு உலக புத்தக தின விழா