அச்சிறுப்பாக்கத்தில் மூலிகை தண்ணீர் பந்தல் திறப்புமதுராந்தகம், ஏப்.24: அச்சிறுப்பாக்கத்தில் பொதுமக்கள் கோடை வெயிலை சமாலிக்க மூலிகை தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் ஏழை மாணவர்கள் சங்கம் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக அச்சிறுப்பாக்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் மூலிகை தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது.மாணவர் அமைப்பு சங்க நிர்வாகி மின்னல் ஸ்ரீதர், சமூக ஆர்வலர் நீலமேகம் ஆகியோர் மூலிகை தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். இந்த தண்ணீர் பந்தலில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொரு நாளும் வெட்டிவேர், நன்னாரி, துளசி சாறு உள்பட இயற்கை மூலிகை பொருட்களை தண்ணீரில் கலந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறுகின்றனர்.

× RELATED நீர் திறப்பதை கண்காணிக்க...