ரயில் மோதி ஊழியர் பலி

ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் பெருமாள் (45).  அண்ணனூர் ரயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன் தினம் பணியில் இருந்தபோது, டீ குடிக்க வெளியே சென்றார். பின்னர், பணிக்கு   சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தை கடந்து பணிக்கு செல்ல முயன்றார், அவர் மீது எதிர்பாராமல் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெருமாள், அதே இடத்தில் இறந்தார்.

Advertising
Advertising

Related Stories: