பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றும் உத்தரவை எதிர்த்த சீராய்வு மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவர்களை அகற்றுவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுமாறு பொதுப்பணித் துறைக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி உத்தரவிட்டது.  இதையடுத்து, தங்களை வீடுகளிலிருந்து அகற்றும் பொதுப்பணித் துறை, குடிசை மாற்று வாரிய முடிவை எதிர்த்து நடராஜன், ராஜேஸ்வரி உள்ளிட்ட 259 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பொதுப்பணித் துறை, குடிசைமாற்று வாரியம் தங்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கையால் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தனர்.

Advertising
Advertising

இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஏற்கனவே, 399 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அகற்றப்பட்டவர்களுக்கு வசிக்க குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வேறு இடத்தில் ஒதுக்கிய வீடுகளுக்கு மாறுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவர்களுக்கு சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் எந்த சமரசமும் காட்ட தேவையில்லை. ஆக்கிரமிப்பை காலி செய்ய மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீரை நிறுத்த வேண்டும். குடும்ப அட்டைகளை அவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்காக அரசு வழங்கும் பலன்களை குடும்ப அட்டை மூலமாக அவர்கள் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு மாறியதை உறுதிபடுத்திய பின்னர் புது குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.இந்நிலையில், தங்கள் வீடுகள் குடிசை மாற்று வாரிய பகுதியில்தான் உள்ளன. ஆக்கிரமிப்பில் இல்லை. எனவே, வீடுகளை அகற்றும் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கோரி குடியிருப்புவாசிகள் சீராய்வு மனு தாக்கல் செய்

தனர்.இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை. எனவே, இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: