சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை

பெரம்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தண்டையார்பேட்டை டி.ஹெச் ரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த மணி (49) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதுகுறித்த புகாரின் பேரில், தண்டையார்பேட்டை போலீசார் கடந்த 10 மாதத்திற்கு முன், மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வௌியில் வந்தார்.

Advertising
Advertising

 இந்த வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, வழக்கு விசாரித்த நீதிபதி, மணி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ₹50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: