கொங்கணாபுரம் சந்தையில் ஆடு, கோழி விற்பனை அமோகம்

இடைப்பாடி, ஏப்.23:  கொங்கணாபுரம் சந்தையில் ஆடு, கோழி விற்பனை களை கட்டியது. ஒரேநாளில் ₹2.5 கோடி வர்த்தகம் நடைபெற்றது.

இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு, நேற்று முன்தினம் சுற்றுப்புற பகுதியில் இருந்து 6600 ஆடுகள், 1900 சேவல், கோழிகளை கொண்டு வந்திருந்தனர். இதேபோல், 91 டன் காய்கறிகள், 5 டன் புளி, 4 டன் தர்பூசணியை விற்பனைக்காக குவித்திருந்தனர். 10 கிலோ ஆடு ₹4500 முதல் ₹5500 வரையிலும், வளர்ப்பு குட்டி ₹900 முதல் ₹1300 வரையிலும், பந்தய சேவல் ₹900 முதல் ₹2700 வரையிலும், சேவல் ₹350 முதல் ₹900 வரையிலும், கோழி ₹100 முதல் ₹400 வரையிலும் விலை போனது.

தக்காளி பெட்டி(27 கிலோ) ₹500 முதல் ₹700 வரையிலும், 10 கிலோ பெட்டி ₹400 முதல் ₹500க்கும், தர்பூசணி ₹30 முதல் ₹100க்கும், பீன்ஸ் கிலோ ₹50 முதல் ₹60க்கும், கேரட் ₹35க்கும், உருளைக்கிழங்கு ₹22க்கும், சின்ன வெங்காயம் ₹20க்கும், பெரிய வெங்காயம் ₹15க்கும் விற்பனையானது. பானை ஒன்று ₹100 முதல் ₹300க்கும், கால்நடை கயிறு, சங்கு, மணி மற்றும் சலங்கை ₹10 முதல் ₹100 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. சுற்றுப்புற பகுதியில் கோயில் பண்டிகை மற்றும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்றுத்தீர்ந்தது. இதன்மூலம் ₹2.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: