×

100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

கோவை, ஏப். 23 : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய 14 வகை பிளாஸ்டிக் கவர்கள், பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்த தடையை அடுத்து கோவை மாநகராட்சி சார்பாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோவை காந்திபுரம், வடவள்ளி, சக்தி ரோடு, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு ரூ 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை