விநாயகா மிஷன்ஸ் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

சேலம், ஏப்.23:  சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் பொறியியல் கல்லூரியில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் பொறியியல் கல்லூரி மற்றும் சேலம் உற்பத்தி திறன் மன்றம் இணைந்து எஸ்பிசி வைரவிழா ஆண்டினை, கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். கல்லூரி முதல்வர் நாகப்பன் வரவேற்று, தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர் சேலம் உற்பத்தி திறன் மன்ற தலைவர் பொறியாளர் மாரியப்பன், முகாம் பற்றி சிறப்புரையாற்றினார். இதில் பொறியாளர்கள் ராமனாதன், துணை தலைவர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுப்பரமணியபாரதி மற்றும் இணை பேராசிரியர் சாரதி, இணை பேராசிரியர்கள் பிரைம்ஸ் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்து கொண்டனர். மன்றத்தின் சார்பில், 20 இறுதி ஆண்டு மாணவர்கள், 20 முன்னாள் மாணவர்கள் மற்றும் (கல்லூரியின் என்எஸ்எஸ் குழுவால் தத்தெடுக்கப்பட்ட) 20 வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு, தொழிற் முனைவோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. குமரேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ராஜன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: