பசுமை பூங்காவில் பிளாஸ்டிக் கழிவு கொட்டிய வாலிபருக்கு அபராதம்

ேமட்டூர், ஏப்.23: மேட்டூர் அருகே பி.என்.பட்டி ேபரூராட்சிக்கு உட்பட்ட தேங்கல்வாரையில், குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க, பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், இரவு ேநரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஒரு மினி டெம்போவில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்த நபரை, அப்பகுதி மக்கள் பிடித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி மகன் சுதாகர்(28) என்பதும், பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்பகுதியில் கொட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பி.என்.பட்டி ேபரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, சுதாகருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், ஏற்கனவே கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

Related Stories: