×

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு, ஏப். 23:   வாக்கு எண்ணும் மையம் மற்றும் கட்டுப்பாடு அறையினை கலெக்டர் கதிரவன் நேற்று பார்வையிட்டார்.  ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1678 வாக்குசாவடி மையங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் ஈரோடு அடுத்துள்ள சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு பதிவு மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கதிரவன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அப்போது மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை மையங்கள், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு அறை, ஊடக மையம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். மேலும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்புக்கான குறிபேடு பதிவுகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் தினேஷ், கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags : vote count center ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில்...