×

கடனை திரும்ப கேட்ட வாலிபருக்கு அடி உதை

ஈரோடு, ஏப். 23:  ஈரோட்டில் கடன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட வாலிபரை அடித்து உதைத்த தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் விக்னேஷ் (32). அரிசி வியாபாரி. இவரது நண்பர் ஈரோடு கோட்டை முத்துசாமி வீதியை சேர்ந்த முருகன் மகன் கவுதமன் (30). விக்னேஷிடம், கவுதமன் கடனாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார்.இந்த பணத்தை விக்னேஷ் பலமுறை கேட்டும் திருப்பி தரவில்லை. இதனால் நேற்று முன்தினம் விக்னேஷ், கவுதமன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அதற்கு கவுதமன் மீண்டும் காலஅவகாசம் கேட்டாராம். இதை ஏற்க மறுத்து விக்னேஷ் பணம் கொடுத்தால் தான் வீட்டில் இருந்து செல்வேன் என கூறி வீட்டிலேயே இருந்துள்ளார்.  இதில் விக்னேஷிடம், கவுதமன் மற்றும் கவுதமனின் அப்பா முருகனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.பின்னர் ஆத்திரம் அடைந்த கவுதமன் மற்றும் முருகன் ஆகியோர் இருவரும் சேர்ந்து விக்னேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த விக்னேஷ் நேற்று ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுதமன், முருகனை கைது செய்தனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு