தொடர் விடுமுறை காரணமாக தபால் ஓட்டு படிவங்கள் நேற்றும் விநியோகம்

ஈரோடு, ஏப். 23:  தொடர் அரசு விடுமுறை காரணமாக தபால் ஓட்டு படிவங்கள் நேற்றும் அரசு ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு படிவங்கள் முதல் கட்ட வாக்கு பதிவு பயிற்சியின் போது நேரில் வழங்கப்பட்டது. இதே போல அடுத்தடுத்து நடந்த பயிற்சியின் போது நேரில் வழங்கப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து பயிற்சி வகுப்பின் போது தபால் ஓட்டு படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்களுக்கு தபால் மூலமாக வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்திருந்தனர்.  மேலும் வாக்கு பதிவுக்கு முன்பாகவே அவர்களுக்கு தபால் வாக்கு படிவங்கள் கிடைத்துவிடும் என அதிகாரிகள் கூறினர்.இந்நிலையில் கடந்த வாரம் மகாவீர் ஜெயந்தி, வாக்குபதிவு, புனிதவெள்ளி மற்றும் வார விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக தபாலில் அனுப்பபட்ட தபால் வாக்கு படிவங்கள் அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேராமல் இருந்தது.   இந்நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு படிவங்கள் வீட்டு முகவரிக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: