அனைத்து கோயில் உண்டியல்களில் வைக்கப்படும் இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படுமா?

திருச்சி,ஏப்.23: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோயில் உண்டியல்களுக்கு இலாகா முத்திரையிட ஆய்வாளர் முதல் உதவி ஆணையர் வரை 24 மணி நேரமும் அதிகாரிகள் தன்வசம் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்டியல்களுக்கு சீல் வைப்பது, உண்டில் திறப்பு, உண்டியல் திறப்பு முடிந்ததும் மீண்டும் சீல் வைப்பது போன்ற பணிகளுக்காக இந்த இலாகா முத்திரை வழங்கப் பட்டுள்ளது.இதில் ஒரு சில அதிகாரிகளுக்கு எந்த நோக்கத்திற்காக இலாகா முத்திரை வழங்கப் பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. தமிழக கோயில் பல கோயில் களில் இலாகா முத்திரை இடப்பட்ட உண்டியல் அருகிலேயே இலாகா முத்திரை இல்லாத கள்ளத்தனமாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதற்கான அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் கோயில் உண்டியல் வருவாய், கள்ள உண்டியலுக்கே செல்கிறது. கோயிலில் ஊழல் நடை பெறாமலும், வருவாய் ஏற்ப்பு நடைபெறாமலும் கோயில் சொத்தை பாதுகாக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கள்ள உண்டியலுக்கு துணை போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து தமிழக கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு, தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மாவட்டம் தோறும் அதிகாரி களுக்கு கொடுக்கப்பட்ட இலாகா முத்திரை பல மாவட்டங்களில் பயன்படுத்தப் படாமல் தொலைந்து போனது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடு த்தும் ஒரு சிலர் கண்டு கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

ஓரிரு மாவட்டங்களில் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கும் கொடுக்கப்பட்ட இலாகா முத்திரை மாயமானதாகவும், இதனால் உதவி ஆணையர் அலுவல கங்க ளில் வைக்கப்படும் முக்கிய கோப்புகள் வைக்கப்படும் அறை, தினந்தோறும் சீல் வைக்கப்படும் வழக்கத்தை பின்பற்றாத காரணத்தால் சில முக்கிய கோப்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் மாயமானதாக தெரிய வருகிறது.இதனால் உண்டியல் முறைகேடு நடப்பதாகவும், இலாகா முத்திரை திருட்டு போன தாக கூறிவிட்டு, மாயமானதாக பல மாவட்டங்களில் உண்டியல் திறப்பதாக தெரிய வருகிறது. எனவே இலாகா முத்திரை மாயனமாது பற்றி இதுவரை புகார் கொடுக் கப்பட்டுள்ளதா, புகார் மீது என்ன நடவடிக்கை , இதுவரை ஏன் புதிய இலாகா முத்திரை வழங்கப்படவில்லை.தமிழகத்தில் பல கோயில்களில் பல லட்சம் வருவாய் கோயில் பெயரில் சொத்து இருந்தும், கோயிலுக்கு துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று உரிய ஆவணங்களோடு சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட் டால் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர தயங்கி வருகின்றனர். எனவே அனை த்து மாவட்ட அதிகாரிகளிடம் உள்ள இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: