முசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

தா.பேட்டை, ஏப்.23:   முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகப் பணி துவங்கியது. முசிறி அறிஞர் அண் ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019-2020ம் கல்விஆண்டிற்கான இளங்கலை வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி ஒரு விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 6.5.2019 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விண்ணப்பங்கள் குறித்த கலந்தாய்வு 9.5.2019 சிறப்பு இடஒதுக்கீடு (விளையாட்டு, உடல்ஊனமுற்றோர்) பி.லிட் தமிழ், பி.ஏ ஆங்கிலம், 400 மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து பாடங்களுக்கும் 13.5.2019- 400 -325 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 14.5.2019- 324 -275 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 15.5.2019- 274 -225 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 16.5.2019- 224 -200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 17.5.2019- 199க்கு கீழ் மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து) நடைபெறவுள்ளது. மேலும் சேர்க்கை விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் நகல், சாதி சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், அஞ்சல்அட்டை சுயவிலாசமிட்டது ஆகியவற்றுடன் விண்ணப்பிப்பது அவசியமாகும். இவ்வாறு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

Related Stories: