×

டெல்டா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஓய்வெடுக்கும் காளைகளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தயார்ப்படுத்தும் பணி

திருச்சி, ஏப்.23: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதால் டெல்டா பகுதி களில் தற்போது ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர்கள் காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீக்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் அதிகமான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் கிராம த்தினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதபோல் காளைகள் தரமானதாகவும் உள்ளது. இந்நிலையில் காளை வளர்ப் போர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை பரபரப்பாக இயங்கி வந்தனர். இதபோல் காளைகளும் பரபரப்பாக காணப்பட்டது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருவதால் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை பெறுவ தில்லை. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறாமல் இருப்பதால் காளைகள் உரிமை யாளர்களின் வீடுகளில் தொடர்ந்து ஓய்வு வெடுத்து வருகிறது. காளையின் உரிமை யாளர்கள் பல்வேறு பணிகளில் ஈபட்டுள்ளனர். மேலும் காளைகளுக்கு தவறாமல் தீவனங்கள் வைப்பது, உடல் நிலையில் மாற்றங் கள் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய மருத்துவர்களை அணுகி அதற்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்து வந்தனர். மேலும் வாரம் ஒரு முறை காளைகளுக்கு பயிற்சியும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் மீண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொட ங்க இருப்பதால் காளைகளை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு தயார்படுத்தும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைக்கு முக்கியமானது கால்கள் தான். அந்த கால்களின் கீழ் குழம்பு பகுதி அதிகமாக வளர்ந்துவிட்டால் காளைகள் ஓடும்போது இடறிவிட்டு விழுவதற்கு வாயப்பு ஏற்படும். இதபோல் வால் பகுதியில் அதிக அளவு முடி வளர்ந்துவிட்டால் அது தரையில் உரசி காளைக்கு காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தற்போது காளை வளர்ப்போர்கள் காளைகளின் கால் பகுதியில் உள்ள குழம்பு பகுதியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காளைகளின் கால் பகுதியில் தேவையற்றவைகளை நீக்கி விட்டுள்ளனர். மேலும் தேவையான காளைகளுக்கு லாடம் கட்டி விடுகின்றனர்.
இதபோல் வால் பகுதியில் உள்ள முடிகளை வெட்டி சரி செய்கின்றனர். இந்த பணிக்கு ஒரு காளைக்கு ரூ.500 முதல் ரூ.ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். இதனால் காளைகள் ஜல்லிக்கட்டில் ஆபத்து இன்றி வேகமாக வீரர்களின் பிடியில் இருந்து தப்பிக்கும். மேலும் காளைகளுக்கு இடறி விழும் நிலை ஏற்படாது என்று காளை வளர்ப்போர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : areas ,Delta ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்