×

துறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்டித்தர கோரிக்கை

துறையூர், ஏப்.23:  துறையூர் அருகே ஒட்டம்பட்டி- நரசிங்கபுரம் சாலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியிலிருந்து நரசிங்கபுரம் செல்லும் வழியில்  பாலம் உள்ளது. இந்த பாலம் காணப்பாடி ஆற்றில் 2 வருடத்திற்கு முன்பு காட்டாற்று வெள்ளப்பெருக்கால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் இதுவரை பாலம் கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வகமோ, ஊராட்சி நிர்வாகமோ கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.  துறையூரிலிருந்து 10க்கு மேற்பட்ட  பள்ளி பேருந்துகள் , ஒட்டம்பட்டி வழியாக நரசிங்கபுரம், பெருமாள்பாளையம் வழியாக துறையூருக்கு பள்ளி மாணவ, மாணவிகள் செல்வார்கள். இந்த பாலம் உடைந்ததிலிருந்து 5 கீ.மீ தூரம் சுற்றி செல்லவேண்டும் என பல கோரிக்கை வைத்து மனுக்கள் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் இந்த சாலை வழியாக தேர்தலில் ஓட்டு கேட்க வேண்டும் என்பதால் மண் அடித்து மண்சாலை அமைத்து ஊராட்சி நிர்வாகம் கொடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்  இந்த பாலம் கட்டுவதற்கு 2 வருட காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்டநிர்வாகம்  உடனடியாக ஒட்டம்பட்டி நரசிங்கபுரம் இடையே உள்ள காணப்பாடி ஆற்றில் பாலம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : bridge ,flooding ,Thuraiyur ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...