வாட்ஸ்அப்பில்அவதூறு தகவல் பரப்பிய சம்பவம் துவரங்குறிச்சி அருகே மக்கள் சாலை மறியல்

மணப்பாறை ஏப்.23. பொன்னமராவதி கலவர சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி துவரங்குறிச்சி அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை பற்றி பேசி வாட்ஸ் அப்பில் பதிவிட்ட இரு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையில் ஒரு சமூகம் குறித்து கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப்பில் அவதூறாக  பதிவிட்ட இரு நபர்கள் மீது  மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், 14க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நேற்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி  ஏராளமானோர் துவரங்குறிச்சி அருகேயுள்ள லிங்கம்பட்டியில்  திரண்டு சாலை மறியல் செய்தனர். இதனால், நத்தம்-துவரங்குறிச்சி சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories: