×

கோட்டூர் பகுதியில் பருத்தி சாகுபடியை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

மன்னார்குடி, ஏப். 23: பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பருத்தி விதைகளை 50 சதவீத மானிய விலையிலும் அதற்கான இடுபொருட்களை இலவசமாக தமிழக  அரசு  வேளாண்மை துறை மூலம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் உள்பட  மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குரு வை சாகுபடி முற்றிலும் பாதிக்க பட்டுள்ளது.  கடும் வறட்சி காரணமாக சம்பா சாகுபடியும் ஒவ்வொரு ஆண்டும் கேள்வி குறியாகவே உள்ளது.  இந் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகள் கோடை சாகுபடி பயிர் களான  உளுந்து, எள், பயிறு, கடலை  பணப் பயிர் களும் ஆங்காங்கே விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர்  ஒன்றியம்  சேந்தமங்கலம், இருள்நீக்கி, விக்கிரபாண்டியம், பனையூர், செறுவாமணி, மழவராயநல்லூர்,  திருவண்டுதுறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல பகுதிகளில் கோடை காலத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடு பட்டு வருகின்றனர். அதில் சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் ஓரளவிற்கு லாபம் தரும் மகசூலும் கிடைத்து வருகிறது. இதனால் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.  தற்போது இப்பகுதிகளில் சுமார் 400 ஏக்கர்களுக்கு மேல் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், காவிரி நதிநீர் பிரச்சனையால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக் கபட்டு விடுமோ என்கிற அச்சம் விவசாயிகளிடையே ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பருத்தி சாகுபடி யை மேற்கொண்டு வருகின்றோம்.இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப் படாது. அதிக அளவில் லாபம் இல்லை என்றாலும் பாதிப்பில்லை. முறை யாக காவிரி நீர் கிடைத்து நெல் சாகுபடி மேற்கொண்டால் சம்பா சாகுபடி அறுவடை தை மாத இறுதிக்குள் அல்லது மாசி மாதம்  வாரத்திற்குள் பெரும் பாலான இடங்களில் சம்பா அறுவடை முடிந்து விடும். பிறகு பருத்தி சாகுபடிகளில் ஈடுபடலாம்.

இதற்கு 120 நாளிலிருந்து  140 நாட்களுக்குள் முதல் மகசூல் ஆகிவிடும். அடுத்து அதிலேயே சரியான அளவு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் போ ட்டு கவனமாக மேற்கொண்டால் 2 வது மகசூல் 30 லிருந்து 40 நாட்களுக்குள் கிடைத்து விடும். நெல் சாகுபடிக்கு முறையாக தண்ணீர் வந்தால் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது உள்ள தண்ணீர் பிரச்சனையில் ஏக்கருக்கு 25 ஆயிர த்திற்கு மேல் செலவாகிறது. ஆனால் பருத்தி சாகுபடி மேற்கொள்ள 20 லிருந்து 24 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. 2 மகசூல் கிடைப்பதாலும், குவிண்டால் ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை கிடைப்பதாலும் ஓரளவு விவசாயி களுக்கு அதிக சிரமம் இல்லாமல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அத னால் தான் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த ஆண்டு முறையாக சாகுபடி மேற்கொண்டோம். ஆனால் பருத்தி செடி யின் வளர்ச்சி சரியாக இல்லாமல் நாட்கள் அதிகமாகியும் தயங்கி போய் உள்ளது. இதற்கு காரணம்  கடுமையாக சுட்டெரிக்கும் வெயிலாலும் கடும் வறட்சியாலும் வளர்ச்சி பாதிக்க படுவதாக கூறப் படுகிறது. இதனால் ஆரம்பமே இப்படி உள்ளது என்ற கவலை ஏற்பட்டுள்ளது. மேலும் மகசூல் பாதிப்பு ஏற்படுமோ என்றா அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே  பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பருத்தி விதை களை 50 சதவீத மானிய விலையிலும் அதற்கான இடுபொருட்களை இலவச மாக தமிழக  அரசு  வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கி னால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.


Tags : government ,Kothore ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்