×

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து இணையம் வழியாக புகார் அளிக்கலாம்

நாமக்கல், ஏப்.23: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தபால் மற்றும் இணையதளம் வழியாக புகார் செய்யலாம் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பது: இந்தியாவில், பாலியல் குற்றங்களில் இருந்து, பாலின வித்தியாசமின்றி, 18 வயதுக்கு குறைவான, அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்க போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்தில், ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல் மற்றும் ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் ஆகியவை சட்டப்படி குற்றம்.

நாமக்கல் மாவட்டத்தில், பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ், மொபைல் போன், தபால் மற்றும் இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யலாம். நாமக்கல் மாவட்டத்தில் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்: ராஜீ, டி.எஸ்.பி மாவட்ட குற்றப்பதிவேடு-94425 64942, ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா-94981 68055 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட எஸ்.பி அருளரசு தெரிவித்துள்ளார்.

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...