×

ராசிபுரம் அருகே 10 ஆயிரம் கிடாக்களை பலியிடும் கோயில் விழா

ராசிபுரம்.ஏப்.23:  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பத்தாயிரம் கிடாக்களை பலியிட்டு வழிபடும் பள்ளத்து கருப்பனார் கோயில் விழா, நாளை (24ம்தேதி) நடக்கிறது. a நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தையடுத்துள்ள பட்டணம் பேருராட்சியில் கடந்த பல நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளத்து கருப்பனார் கோயில் உள்ளது. 2வருடங்களுக்கு ஒரு முறை, சித்திரை மாதத்தில் இந்த கோயில் திருவிழா, வெகுவிமரிசையாக நடக்கும்.
இந்த விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வரிசையாக நிற்க வைத்து வெட்டி பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இந்த வகையில் நடப்பாண்டு திருவிழா, நாளை (24ம்தேதி) ேகாலாகலமாக நடக்கிறது.

இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பட்டணம் பகுதியை சேர்ந்த மக்கள்,  விழுப்புரம் மாவட்டம் பசும்பாலிகாணி கிராமத்திலுள்ள கருப்பசாமியை வழிபடச் சென்றனர். மாட்டுவண்டியில் திரும்பிய போது, அதில் ஒரு கல் இருந்துள்ளது. அதை ஓரிடத்தில் வீசி எறிந்துவிட்டு புறப்பட்டுள்ளனர். ஆனால் மீண்டும், மீண்டும் அந்த கல், மாட்டு வண்டியிலேயே இருந்துள்ளது. பட்டணத்திற்கு வந்தவுடன் ஒரு பள்ளத்தில் கல்லை வீசிய போது, அங்கேயே நின்று விட்டது.

அந்த அபூர்வகல்லை கருப்பனாக நினைத்து மக்கள், பள்ளத்து கருப்பனார் என்று பெயரிட்டு  வழிபட்டு வருகின்றனர்.  விவசாயம் செழிக்கவும், ேநாய் நொடிகள் அகலவும், தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும் 2ஆண்டுக்கு ஒரு முறை, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டு ேநர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதேபோல் வெங்கலமணி, இரும்பு வேல், உள்ளிட்டவைகளை வைத்தும் வழிபடுவார்கள். இத்திருவிழாவை காண  சென்னை, நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வருவார்கள்,’’ என்றனர்.

Tags : Temple Festival ,Rasipuram ,
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து