×

நாமக்கல் மலைக்கோட்டை குழியில் சிநாமக்கல் மலைக்கோட்டை குழியில் சிக்கிய சிறுவன் பத்திரமாக மீட்பு

நாமக்கல், ஏப்.23: நாமக்கல் மலைக்கோட்டை குழியில் சிக்கிய சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் ரத்தினசாமி(15) என்ற சிறுவன் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். சிறுவன் ரத்தினசாமியை பாட்டி மலர்கொடி வளர்ந்து வருகிறார்.  இந்நிலையில், நேற்று மதியம் நாமக்கல் மலைக்கோட்டை மீது சிறுவன் ஏறி விளையாடி கொண்டிருந்தார். அங்கு, மேளசத்தம் கேட்டதால், அதை பார்க்க மலைக்கோட்டையில் நடுப்பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது, அங்கிருந்த ஒரு பாறையில் கால் வழுக்கி, சாய்வு பகுதியில் குழியில் சிக்கி கொண்டான். அங்கிருந்து அவனால் வெளியே வரமுடியாமல், உதவி கேட்டு கூச்சலிட்டான்.
சத்தம் கேட்டு மலைக்கோட்டையின் மற்ற பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். பின்னர், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் கனகராஜ் தலைமையிலான வீரர்கள்,  மலைக்கோட்டையின் சாய்வு பகுதியில், குழியில் சிக்கி இருந்த சிறுவன் ரத்தினசாமியை கயிறு கட்டி மீட்டனர். பின்னர், சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  நாமக்கல், ஏப்.23: நாமக்கல் மலைக்கோட்டை குழியில் சிக்கிய சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் ரத்தினசாமி(15) என்ற சிறுவன் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். சிறுவன் ரத்தினசாமியை பாட்டி மலர்கொடி வளர்ந்து வருகிறார்.  இந்நிலையில், நேற்று மதியம் நாமக்கல் மலைக்கோட்டை மீது சிறுவன் ஏறி விளையாடி கொண்டிருந்தார். அங்கு, மேளசத்தம் கேட்டதால், அதை பார்க்க மலைக்கோட்டையில் நடுப்பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது, அங்கிருந்த ஒரு பாறையில் கால் வழுக்கி, சாய்வு பகுதியில் குழியில் சிக்கி கொண்டான். அங்கிருந்து அவனால் வெளியே வரமுடியாமல், உதவி கேட்டு கூச்சலிட்டான்.
சத்தம் கேட்டு மலைக்கோட்டையின் மற்ற பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். பின்னர், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் கனகராஜ் தலைமையிலான வீரர்கள்,  மலைக்கோட்டையின் சாய்வு பகுதியில், குழியில் சிக்கி இருந்த சிறுவன் ரத்தினசாமியை கயிறு கட்டி மீட்டனர். பின்னர், சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags : mountain cliff ,Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை