வைத்தீஸ்வரன் கோயில் திருவிழாவிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

தஞ்சை, ஏப். 23: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் திருவிழா நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று முதல் சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி புதுக்கோட்டை, கும்பகோணம், காரைக்குடி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.இவ்வாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: