அர்ஜூனா விருது பெற சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி

தஞ்சை, ஏப். 23: 2019ம் ஆண்டுக்கு சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுனர்கள், விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கான அர்ஜூனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறையில் நமது தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்களுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது மற்றும் அர்ஜூனா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.inல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின்மேல் சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர், செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ, ஈவேரா, பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 600084 என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும் விருது தொடர்பாக இதர விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04362 235633 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: