தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

திருக்காட்டுப்பள்ளி, ஏப். 23:  தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற வளப்பக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.திருக்காட்டுப்பள்ளி அடுத்த வளப்பக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர் விக்னேஸ்வரன். இவர் மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ராதா தலைமை வகித்தனர். விழாவில் மாணவர் விக்னேஸ்வரனுக்கு பரிசு வழங்கினர்.

Advertising
Advertising

Related Stories: