குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தாமதம் காத்து கிடந்த மாணவிகளின் பெற்றோர்

தஞ்சை, ஏப். 23: தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டு சேர்க்கை விண்ணப்பம் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மாணவிகளின் பல மணி ேநரம் காத்து கிடந்தனர்.தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் உள்ளூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கு மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பம் நேற்று முதல் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் விண்ணப்பம் வாங்க குவிந்தனர். ஆனால் நீண்ட நேரமாக விண்ணப்பம் வழங்கவில்லை. இதனால் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுமா, விநியோகம் செய்யப்படாதா என்று குழப்பத்தில் மாணவிகள் தங்களது பெற்றோருடன் நின்றனர்.

Advertising
Advertising

அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பெற்றோர்களுடன் வந்த மாணவிகள், விண்ணப்பம் வழங்கவில்லை என்றால் தங்களது ஊருக்கு சென்று விட்டு மீண்டும் வர வேண்டுமென புலம்பி கொண்டிருந்தனர்.சில மாணவிகள் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் விரக்தியடைந்த மாணவிகள் அவர்களது பெற்றோருடன் இணைந்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பம் வழங்கியது.

Related Stories: