×

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் மே 17ல் கலந்தாய்வு



பெரம்பலூர்,ஏப்.23: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்  நேற்று தொடங்கியது.பெரம்பலூர் மாவட்டம், ஆத்தூர் சாலையில், வேப்பந்தட்டை-கிருஷ்ணாபுரம் இடையே அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2019-2020ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று காலை தொடங்கியது. இதனையொட்டி நேற்று காலை 10.30 மணிக்குக்கு கல்லூரியின் முதல்வர் (பொ) சேகர் விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:கல்லூரியில் நடைபெறும் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் பி.காம், பிபி.ஏ. பி,எஸ்சி, கணிதம், பி.எஸ்சி கணினி அறிவியல் பி.எஸ்சி வேதியியல், பி.எஸ்சி, இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ50ஆகும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர் சாதிச்சான்றிதழ் நகலைக்காட்டி விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் பெறுவதற்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்து சேர்வதற்குமான கடைசிநாள் மேமாதம் 6ம்தேதியாகும். கலந்தாய்வு நடைபெறும் நாள் பிஏ ஆங்கிலம் பி.காம் பி.பி.ஏ. ஆகிய பாடங்களுக்கு மேமாதம் 16ம்தேதி காலை 10மணிக்கும் பிஎஸ்சி கணிதம், பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி இயற்பியல் பி.எஸ்சி, வேதியியல், பி.ஏ.தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு மே 17ம்தேதி காலை 10மணிக்கும் நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்.சான்றிதழ்கள்விண்ணப்பித்த மாணவ,மாணவியர் கலந்தாய்வின்போது, 10ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்-1, 12ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்-3, மாற்றுச்சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் உள்ளிட்ட முன்னுரிமை சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் நகல்கள் பாஸ் போர்ட் சைஸ்போட்டோ-3 ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

Tags : Weppantadu Government College ,
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...